
இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது.

உடல் ஆரோக்கியமும் கோலமும்:
இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது
மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
