உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை.
நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது.
இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக பயிற்சி நடத்துகிறோம் . காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி புரிய வைக்கிறோம் . காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக சொல்லி தருகிறோம்.. நேரடியாக வாங்க.
முடிந்த வரை அந்தந்த பருவ காலத்தில் அந்தந்த பகுதிகளில் விளையக் கூடிய பழங்களை சாப்பிடுவது உத்தமம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை தவிர்க்கவும். நம் நாட்டு ஆரஞ்சு, பப்பாளி, சாத்துக்குடி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, மாம்பழம், சப்போட்டா ஆகியவை சாப்பிடலாம்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.
சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.